தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் தலைமை இயக்குனராக திரு முக்மீத் எஸ். பாட்டியா பொறுப்பேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 01 APR 2021 4:01PM by PIB Chennai

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் தலைமை இயக்குனராக திரு முக்மீத் எஸ். பாட்டியா இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஜார்க்கண்ட் பணி நிலையைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான திரு பாட்டியா, நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளராகப் பணியாற்றினார்.

மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிறுவனங்களின் ஆளுமை மற்றும் மேலாண்மையில் அவர் நீண்ட அனுபவமிக்கவர்.

மேலும் ஜார்க்கண்ட் அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறையின் முதன்மை செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1708976

-------


(வெளியீட்டு அடையாள எண்: 1709105) வருகையாளர் எண்ணிக்கை : 242
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi