குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

கொவிட்-19 தொற்றைக் கண்டறிய கழிவு நீர் மற்றும் காற்றை கண்காணிக்கும் முறை: குடியரசுத் துணைத் தலைவரிடம் சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் விளக்கம்

Posted On: 30 MAR 2021 11:46AM by PIB Chennai

கொவிட்-19 தொற்றைக் கண்டறிய, கழிவுநீர் மற்றும் காற்று கண்காணிப்பு முறையை நாடாளுமன்றத்தில் அமைப்பது குறித்து, குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு எம். வெங்கையா நாயுடு அவர்களிடம், அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர் டாக்டர் சேகர் சி.மாண்டே இன்று விளக்கினார்.

அப்போது டாக்டர் மாண்டேவுடன், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குனர் டாக்டர் ராகேஷ் மிஸ்ராஇந்திய ரசாயன தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் எஸ்.சந்திரசேகர்டாக்டர் வெங்கட மோகன், நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த  டாக்டர் அட்யா கப்லே ஆகியோர் உடன் சென்றனர்.

சிஎஸ்ஐஆர் ஆய்வு மையங்களில் மேற்கொள்ளும் பல நடவடிக்கைகள் குறித்து குடியரசுத் துணைத்தலைவருக்கு டாக்டர் மாண்டே விளக்கினார்.

கழிவுநீர் கண்காணிப்பானது, கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை பற்றிய மதிப்பீட்டை சரியாக வழங்குவதாகவும், அதிக அளவிலான மக்களுக்கு கொவிட் பரிசோதனை சாத்தியமில்லாத போதுகொவிட்-19 தொற்றின் முன்னேற்றத்தைக் கண்டறிய இந்த முறையைப் பயன்படுத்தலாம் எனவும் குடியரசுத் துணைத்தலைவரிடம், டாக்டர் மாண்டே தெரிவித்தார். இது, சமூகத்தில் நோய் பரவும் நேரத்தில், விரிவாக கண்காணிக்கும் ஒரு நடவடிக்கையாகும்.

கழிவுநீர் கண்காணிப்பு குறித்து விரிவாக விளக்கிய டாக்டர் மாண்டே, கொவிட்-19 நோயாளிகள், மலக்கழிவுகள் மூலமாகவும் கொரோனா வைரஸ்களை வெளியேற்றுகின்றனர் என்றும்  கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தவிர, அறிகுறி அற்றவர்களும், தங்கள் மலக்கழிவு மூலமாக வைரஸ்களை வெளியேற்றுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

ஐதராபாத், பிரயாக்ராஜ்(அலகாபாத்) தில்லி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், புதுச்சேரி, சென்னை ஆகிய இடங்களில், தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட கழிவுநீர் கண்காணிப்பு விவரங்களை டாக்டர் மாண்டே எடுத்துரைத்தார்இந்தப் பரிசோதனை, தனிநபர் அளவில் மேற்கொள்ளப்படாததால், இது பாரட்சமற்ற மதிப்பீட்டை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கழிவு நீர் கண்காணிப்பு முறை, தற்போதைய கொவிட்-19 தொற்றைப் புரிந்து கொள்வதில் மட்டுமல்ல, இனி வரும் காலங்களிலும், கொவிட்-19 தொற்றுப் பரவலை  முன்கூட்டிய எளிதாக கண்டறியவும், இன்றியமையாததாக இருக்கும் என டாக்டர் மாண்டே கூறினார்.

காற்றில் உள்ள வைரஸ் துகள்கள் மற்றும் தொற்று பரவல் அபாயத்தைக் கண்டறிய,  காற்றை கண்காணிக்கும் கருவிகளையும் பொருத்தலாம் என்று அவர் ஆலோசனை கூறினார்

சிஎஸ்ஐஆர் விஞ்ஞானிகளையும், அவர்களது பணியையும் குடியரசுத் துணைத்தலைவர் பாராட்டினார். மேலும், இந்த  விஷயம் குறித்து மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா மற்றும் மத்திய அரசிடம் தாம் ஆலோசிப்பதாக, விஞ்ஞானிகள் குழுவினரிடம் குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1708376

******

(Release ID: 1708376)(Release ID: 1708426) Visitor Counter : 7