குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஹோலிப் பண்டிகை: நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து
Posted On:
29 MAR 2021 11:02AM by PIB Chennai
ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
“வண்ணங்களின் திருவிழா - ஹோலிப் பண்டிகை புனித தருணத்தில் நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடு முழுவதும் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடன் கொண்டாப்படும் இந்த வண்ணமயமான திருவிழா, தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை கொண்டாடுகிறது. நாட்டு மக்கள ஒவ்வொருவரும் மற்றவருடன் இணைந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதையும் ஹோலி பண்டிகை குறிக்கிறது. இந்த வசந்த விழாவில், வண்ணங்களின் கலப்பு, நமது கலாச்சார கலப்பு மற்றும் நாகரீக மதிப்புகளின் பகிர்வை நினைவூட்டுகிறது.
நமது நாட்டில், திருவிழாக்கள் எப்போதும், குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடுவதாகத்தான் எப்போதும் உள்ளது. ஆனால் தற்போது, கொவிட் தொற்று நேரத்தில், கொவிட் நெறிமுறைகளை பின்பிற்றி நாட்டு மக்கள் இந்த விழாவை கொண்டாட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த விழா நமது வாழ்வில் அமைதி, நல்லிணக்கம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்’’.
****
(Release ID: 1708272)