பிரதமர் அலுவலகம்
ஹரி கோவிலுக்கு வருகை புரிந்த பிரதமர் ஒரகண்டியில் சமுதாய வரவேற்பை ஏற்றுக் கொண்டார்
Posted On:
27 MAR 2021 6:28PM by PIB Chennai
வங்கதேசத்தில் தமது இரண்டாவது நாள் பயணத்தின் போது ஒரகண்டியில் உள்ள ஹரி மந்திர் என்றழைக்கப்படும் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, மதிப்பிற்குரிய தாகூர் குடும்பத்தின் வாரிசுகளுடன் உரையாடினார்.
ஸ்ரீ ஸ்ரீ ஹரி சந்த் தாகூர் அவர்கள் சமூக சீர்திருத்தங்களுக்காக தமது புனிதமான செய்தியை வழங்கிய ஒரகண்டியில் உள்ள மத்வா சமூகத்தின் பிரதிநிதிகளோடு பிரதமர் உரையாடினார்.
தங்களது வளர்ச்ச்சியின் மூலமாக உலகத்தின் மேம்பாட்டை காண இந்தியா மற்றும் வங்கதேசம் விரும்புவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். நிலையற்றத்தன்மை, பயங்கரவாதம் மற்றும் அமைதியின்மைக்கு பதிலாக நிலைத்தன்மை, அன்பு மற்றும் அமைதியை இரு நாடுகளும் விரும்புவதாக கூறிய அவர், இதே மாண்புகளை தான் ஸ்ரீ ஸ்ரீ ஹரி சந்த் தாகூர் அவர்களும் வழங்கினார் என்றார்.
அனைவருடன் இணைந்து அனைவருக்கான வளர்ச்சியை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறதென்றும், இதில் வங்கதேசம் சகபயணி என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
அதே சமயம், வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான சிறந்த உதாரணமாக வங்கதேசம் விளங்குவதாகவும், இந்த முயற்சிகளில் வங்கதேசத்தின் சகபயணியாக இந்தியா விளங்குவதாகவும் அவர் கூறினார்.
ஒரகண்டியில் உள்ள பெண்களுக்கான நடுநிலை பள்ளியை மேம்படுத்துவது, ஆரம்ப பள்ளி ஒன்றை அங்கு நிறுவுவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பிரதமர் வெளியிட்டார்.
ஸ்ரீ ஸ்ரீ ஹரி சந்த் தாகூரின் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடப்படும் பருனி ஸ்னானில் பங்கேற்பதற்காக எண்ணற்ற மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஒரகண்டிக்கு பயணம் மேற்கொள்வதை குறிப்பிட்ட பிரதமர், இப்பயணத்தை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
------
(Release ID: 1708139)
Visitor Counter : 244
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam