மத்திய அமைச்சரவை

இந்தியாவின் மத்திய பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஆப்கானிஸ்தானின் சுயாதீன நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் குடிமைப்பணிகள் ஆணையம் ஆகியவற்றுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 23 MAR 2021 3:24PM by PIB Chennai

இந்தியாவின் மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மற்றும் ஆப்கானிஸ்தானின் சுயாதீன நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் குடிமைப்பணிகள் ஆணையம் (ஐஏஆர்சிஎஸ்சி) ஆகியவற்றுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஐஏஆர்சிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி ஆகியவற்றுக்கு இடையேயான உறவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுப்படுத்தும். பணியாளர்கள் தேர்வில் இருதரப்புக்கும் உள்ள அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளவும் இது வழிவகுக்கும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:

1) அரசுப் பணியாளர்கள் தேர்வில் நவீன அணுகுமுறை குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுதல்.

2) ரகசியமில்லா பிரிவை சேர்ந்த புத்தகங்கள், கையேடுகள் மற்றும் இதர ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்கள் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளுதல்.

3) எழுத்துத் தேர்வு மற்றும் கணினி சார்ந்த தேர்வு முறை ஆகியவற்றில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்த நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளுதல்.

4. விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிப்பதற்கான ஒற்றை சாளர முறை குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுதல்.

5. தேர்வு முறையில் உள்ள பல்வேறு செயல் முறைகள் குறித்த அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளுதல்.

6. அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்தல்.

7. பல்வேறு பதவிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுதல்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1706906

*****************



(Release ID: 1706960) Visitor Counter : 199