பிரதமர் அலுவலகம்

டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு புகழாரம்

Posted On: 23 MAR 2021 9:09AM by PIB Chennai

டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும், சமதர்ம சிந்தனையாளருமான டாக்டர் ராம் மனோகர் லோகியா அவர்களின் பிறந்த தினத்தன்று அவருக்கு எனது மரியாதைகள். தமது கூர்மையான மற்றும் முற்போக்கான எண்ணங்களால் நம் நாட்டிற்கு புதிய பாதையை உருவாக்க அவர் பணியாற்றினார். நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பு குடிமக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

*****************



(Release ID: 1706875) Visitor Counter : 187