பிரதமர் அலுவலகம்

பிகார் தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 22 MAR 2021 9:54AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிகார் மாநிலம் உருவான நாளான இன்று அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள சுட்டுரைச் செய்தியில், “பிகார் தினத்தையொட்டி அம்மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். பெருமைமிகு கடந்த காலம் மற்றும் செழுமையான கலாச்சாரம் என்ற சிறப்பு அடையாளத்தை கொண்டிருக்கும் இந்த மாநிலம் வளர்ச்சிக்கான புதிய பரிணாமங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

•••••


(வெளியீட்டு அடையாள எண்: 1706529) வருகையாளர் எண்ணிக்கை : 233