குடியரசுத் தலைவர் செயலகம்

கங்கை, சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தான் நமது நாட்டின் மேம்பாட்டிற்கான அடித்தளம்: குடியரசுத் தலைவர்

Posted On: 15 MAR 2021 4:40PM by PIB Chennai

 “கங்கை, சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்தின்பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தான் நமது நாட்டின் மேம்பாட்டிற்கான அடித்தளம் என்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

கங்கை, சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரம் தொடர்பான விஷயங்கள் குறித்து வாரணாசியில் தைனிக் ஜாக்ரன் இன்று (மார்ச் 15, 2021) ஏற்பாடு செய்திருந்த ஜாக்ரன் மன்றத்தின் துவக்க விழாவில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

நமது வாழ்க்கையில் கங்கையின் புனிதத்தன்மை மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். கங்கை நீரைப் போல நமது எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு அது கற்றுத் தருகிறது.

கங்கையை வெறும் ஆறாக மட்டும் கருதுவது பொருத்தமாக இருக்காது. அது இந்திய கலாச்சாரத்தின் உயிர் நாடியாக இருப்பதுடன் ஆன்மீகம் மற்றும் நம்பிக்கையின் பாலமாகவும் விளங்குகிறது.

உலகின் ஒவ்வொரு மூலையில் வசிக்கும் இந்தியர்களை அவர்களது தாய் நாட்டுடனும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் கங்கை இணைப்பதால் இந்திய மக்களின் அடையாளமாக அது திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கங்கை, தடையில்லாமல் தூய்மையாக விளங்கும் போதுதான் நமது நாட்டில் சுற்றுச்சூழலும், கலாச்சாரமும் பாதுகாக்கப்பட்டு, ஊக்குவிக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1704865

*****************


(Release ID: 1704911)