நிதி அமைச்சகம்

காப்பீட்டு சேவைகள் தொடர்பான புகார்களுக்கு விரைவில் தீர்வு காண காப்பீட்டு குறை தீர்ப்பாளர் விதிகள், 2017-இல் விரிவான திருத்தங்கள் அறிவிப்பு

Posted On: 03 MAR 2021 9:33AM by PIB Chennai

காப்பீடு சேவைகள் தொடர்பான புகார்களை  உரிய நேரத்தில், குறைந்த செலவில், பாரபட்சமின்றி வழங்கும் வகையில் காப்பீட்டு குறை தீர்ப்பாளர் அமைப்பு முறையின் பணிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு, காப்பீட்டு குறை தீர்ப்பாளர் விதிகள், 2017-இல் விரிவான திருத்தங்களை மார்ச் 2-ஆம் தேதி அரசு அறிவித்தது.

இதன்படி காப்பீட்டாளர், முகவர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோரின் சேவைகள் மீதான புகார்களும் குறை தீர்ப்பாளர்களிடம் வழங்கப்படும். மேலும் காப்பீட்டு இடைத்தரகர்களும் குறை தீர்ப்பாளர் அமைப்புமுறையின் வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

திருத்தியமைக்கப்பட்ட விதிகளின்படி உரிய காலத்தில், குறைந்த செலவில் குறைகளை தீர்க்கும் அமைப்புமுறை வலுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காப்பீட்டுதாரர்கள் இணையதளம் வாயிலாக தங்களது புகார்களை வழங்கவும், புகார்கள் குறித்த தற்போதைய நிலையை இணையதளத்தில் அறியவும் வசதிகள் செய்து தரப்படும்.

புகார்களை காணொலிக் காட்சி வாயிலாகவும்  குறை தீர்ப்பாளர் விசாரிக்கலாம்.

அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிப்பை காண இங்கே கிளிக் செய்யவும்:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/mar/doc20213301.pdf

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1702099

******************


(Release ID: 1702263)