தேர்தல் ஆணையம்

மக்கள் பிரதிநிதித்ததுவ சட்டப்படி அரசியல் கட்சிகளின் பதிவு - பொது அறிவிப்பு காலம்

Posted On: 02 MAR 2021 4:42PM by PIB Chennai

அரசியல் கட்சிகளின் பதிவு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, 29 பிரிவின் கீழ் நிர்வகிக்கப்படுகிறதுஇப்பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய விரும்பும் கட்சிஅரசியல் சாசனத்தில் 324வது பிரிவு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, 29 பிரிவின் கீழ் வழங்கப்பட்ட விதிமுறைகள் படி, கட்சி தொடங்கி 30 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.   தற்போதுள்ள விதிமுறைப்படிவிண்ணப்பிக்கும் அமைப்பு கட்சியின் பெயரை  இரண்டு தேசிய தினசரி நாளிதழ்கள், இரண்டு உள்ளூர் தினசரி நாளிதழ்களில்  பொது அறிவிப்பாக  வெளியிட வேண்டும்இது தொடர்பாக யாராவது எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால், பொது அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள், தேர்தல் ஆணையத்திடம்  சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொது தேர்தல்களை தேர்தல் ஆணையம் 26.02.2021 தேதி அறிவித்ததுகொவிட்-19 சூழல் காரணமாக, புதிய அரசியல்  கட்சிகளின் பதிவு குறித்த விண்ணப்பங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க தாமதம் ஏற்பட்டது, தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுஆகையால், இவற்றை கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையம் சில தளர்வுகளை அளித்து, புதிய அரசியல் கட்சிகள் பொது அறிவிப்பு வெளியிடும் காலத்தை 30 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைத்துள்ளது. இது 26.02.2021ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்பு பொது அறிவிப்பு வெளியிட்ட கட்சிகளுக்கு பொருந்தும்.  26.02.2021 ம் தேதிக்கு முன்பாக,  7 நாட்களுக்குள் பொது அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ள கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும்ஆட்சேபனை ஏதேனும் இருந்தால், 02.03.2021 அன்று மாலை 05.30 மணிக்குள் அல்லது வழக்கமாக வழங்கப்படும்  30 நாள் அவகாசம், இதில் எது முன்போ  அதற்குள்  சமர்ப்பிக்கலாம்.

இந்த தளர்வு, அசாம், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகி மாநிலங்களில் சட்டப்பேரவை பொது தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலின் கடைசி தேதியான 19.03.2021 மற்றும் மேற்கு வங்க  மாநில சட்டப் பேரவை தேர்தலில் வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி தேதி 07.04. 2021 வரை அமலில் இருக்கும்.

---------------- 



(Release ID: 1702027) Visitor Counter : 1254