ரெயில்வே அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் உள்ள நிம்திட்டா ரயில் நிலையத்தில் துரதிர்ஷ்டவசமான வெடி விபத்து
प्रविष्टि तिथि:
18 FEB 2021 3:01PM by PIB Chennai
கிழக்கு ரயில்வேயின் மால்டாவில் உள்ள நிம்திட்டா ரயில் நிலையத்தில் நேற்றிரவு 10.20 மணிக்கு துரதிர்ஷ்டவசமான வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தை இந்திய ரயில்வே கண்டித்துள்ளது.
நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ரயில்வே உடனடியாக தொடங்கியது. காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு ரயில்வே காவல் படையினர் மற்றும் இதர ரயில்வே அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், மாநில காவல் துறையினரே இதற்கு முழு பொறுப்பாகும். ரயில் நிலைய நடைமேடைகளின் சட்டம் ஒழுங்கு பொறுப்பும் மாநில அரசின் ரயில்வே காவல் துறையிடம் தான் உள்ளது.
மேற்கு வங்க தொழிலாளர் நல அமைச்சர் திரு. ஜாகிர் ஹுசேன் உட்பட 25 பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் சிகிச்சைக்காக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699021
------
(रिलीज़ आईडी: 1699220)
आगंतुक पटल : 148