நிதி அமைச்சகம்

எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தங்கள்: 15 மாநிலங்கள் நிறைவு செய்தன

Posted On: 17 FEB 2021 11:18AM by PIB Chennai

எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தங்களை நிறைவு செய்த மாநிலங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய செலவினத்துறை அறிவித்த, எளிதாக தொழில் தொடங்கும் சீர்திருத்தங்களை நிறைவு செய்து விட்டதாக குஜராத், உத்தரப் பிரதேம், உத்தரகாண்ட்  ஆகிய மாநிலங்களும் தற்போது அறிவித்துள்ளன.

இதையடுத்து தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் பரிந்துரையின் பேரில், இந்த 3 மாநிலங்களும், வெளிச் சந்தையில் ரூ.9,905 கோடிக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்டிக் கொள்ள செலவினத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன்பு  ஆந்திரப் பிரதேசம்அசாம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தங்களை நிறைவு செய்து விட்டதாக அறிவித்திருந்தனஇதை தொழில் வளர்ச்சி துறையும் உறுதி செய்தது.

இந்த சீர்திருத்தத்தை நிறைவு செய்த 15 மாநிலங்களும், ரூ.38,088 கோடி கூடுதல் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் வர்த்தக முதலீட்டை அதிகரிக்க, இந்தச் சீர்திருத்தம் மிக முக்கியமானதுஎளிதாக தொழில் செய்யும் சூழல் மேம்பட்டால், நாட்டின் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடையும்அதனால் இந்த சீர்திருத்தத்தை  மேற்கொள்ளும் மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் எடுத்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698600

**************


(Release ID: 1698710) Visitor Counter : 220