விவசாயத்துறை அமைச்சகம்

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் உணவுப் பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான இந்திய அரசின் முயற்சிகள்

Posted On: 15 FEB 2021 6:41PM by PIB Chennai

விளைநிலத்தின் விரிவாக்கம் மற்றும் உற்பத்தி திறன் மேம்பாடு, மண்வளத்தை மீட்டமைத்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வேளாண் சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் அரிசி, கோதுமை மற்றும் தானியங்களின் விளைச்சலை அதிகரிப்பதற்காக தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தை 2007-08- ஆம்ஆண்டு அரசு தொடங்கியது.

கூடுதல் உற்பத்தி இலக்கான 25 மில்லியன் டன்களுடன் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் இயக்கம் தொடரப்பட்டது.12-வது ஐந்தாண்டு திட்டத்திற்கு பின்னர், 2017-18 முதல் 2019-20 வரை புதிய கூடுதல் உற்பத்தி இலக்கான 13 மில்லியன் டன்களுடன் இத்திட்டம் தொடர்ந்தது. இதில் 5 மில்லியன் டன்கள் அரிசி, மூன்று மில்லியன் டன்கள் கோதுமை, மூன்று மில்லியன் டன்கள் தானியங்கள் மற்றும் இரண்டு மில்லியன் டன்கள் ஊட்டச்சத்து மிக்க மற்றும் இதர தானியங்கள் ஆகியவை அடங்கும்.

இத்திட்டத்தின் கீழ் விதை விநியோகம், வேளாண் இயந்திரங்கள், வளங்கள்,

கருவிகள், நீர் பயன்பாட்டுக் கருவிகள், தாவரப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து நிர்வாகம் மற்றும் அமைப்பு சார்ந்த பயிற்சிகள் ஆகியவை வழங்கப்பட்டன.

2020-21-ஆம் வருடத்தில் இருந்து அடிப்படை பதப்படுத்துதல் அமைப்புகள், சிறிய சேமிப்பு களன்கள், நெகிழ்வு  தன்மைமிக்க நடவடிக்கைகள் போன்றவை விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப சேர்க்கப்பட்டன.

தரமான விதைகளை விவசாயிகளின் இடங்களுக்கே கொண்டு சேர்க்கும் வகையில், 2014-15 முதல் 2019-20 வரை, 16 லட்சம் குவின்டால் சான்றளிக்கப்பட்ட விதைகள் உற்பத்தி செய்யப்பட்டன. 2014-15 முதல் 2019-20 வரை, மாநிலங்கள் மற்றும் செயல்படுத்தும் முகமைகளுக்கு மத்திய அரசின் பங்காக ரூபாய் 8760.81 கோடி வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698199

                                                          ----



(Release ID: 1698263) Visitor Counter : 222