மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்களின் நேரடி வருகை அதிகரிப்பு
प्रविष्टि तिथि:
15 FEB 2021 2:45PM by PIB Chennai
நாட்டில் இயங்கும் அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சராசரியாக 42% ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும், 65% பத்தாம் வகுப்பு மாணவர்களும், 48 சதவீதம் பதினோராம் வகுப்பு மாணவர்களும், 67% பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களும் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று பயில்வதாக பிப்ரவரி 11, 2021 அன்று தொகுக்கப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வரும் இந்த எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கு மாநில அரசுகளால் அனுமதி வழங்கப்பட்டுள்ள மாநிலங்களில் உள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-8 வரை நேரடியான வகுப்புகள் மீண்டும் தொடங்கிவிட்டன.
மாணவர்கள்/ பெற்றோரின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், பெற்றோர் மற்றும் பொறுப்பாளர்களிடம் முறையான தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது.
பொறுப்பாளர்களின் சம்மதத்தின் பேரில் மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர்.
கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் விடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகின்றன. பல்வேறு வகுப்புகளுக்கு இடையே போதிய நேர இடைவெளி இருக்க வேண்டும் என்றும், வகுப்பறைகளில் தனிநபர் இடைவெளி உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் பள்ளிகளுக்கு நேரடியாக வர இயலாத மாணவர்களுக்குக் காணொலி வகுப்புகளும் நடைபெறுகின்றன. பல்வேறு டிஜிட்டல் தளங்களின் வாயிலாகவும் மாணவர்கள் தொடர்ந்து ஆசிரியர்களுடன் தொடர்பில் உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698100
-------
(रिलीज़ आईडी: 1698179)
आगंतुक पटल : 210