சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் இனத்தை நீக்குவது குறித்த செய்தி: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் விளக்கம்

प्रविष्टि तिथि: 15 FEB 2021 3:07PM by PIB Chennai

பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் இனத்தை நீக்குவது தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முழுவதும் தவறானவை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான செய்திகள் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. ஏழு பட்டியல் பிரிவு இனங்களை தேவேந்திரகுல வேளாளர்களாக வகைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், தமிழ்நாட்டின் பட்டியல் இனங்களில் ஒன்றாக இது இருக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.எனவே, பட்டியல் பிரிவில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாற்றப்படுவார்கள் என்பது முழுவதும் தவறானது என்றும், உண்மை நிலையை அது பிரதிபலிக்கவில்லை என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் பட்டியல் பிரிவில் தேவேந்திரகுல வேளாளர்களாக  வகைப்படுத்தப்பட்டிருக்கும்  7 பிரிவுகளை சேர்ப்பதற்கான மசோதா மக்களவையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

*************


(रिलीज़ आईडी: 1698153) आगंतुक पटल : 442
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Telugu