சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
ஆன்லைனில் ‘கைவினை பொருட்கள் கண்காட்சி : மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தகவல்
Posted On:
14 FEB 2021 1:50PM by PIB Chennai
தில்லி ஜவஹர்லால் அரங்கத்தில் பிப்ரவரி 20-ம் தேதி முதல் நடைபெறும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை, ஆன்லைனில் பார்வையிடலாம் என மத்திய சிறுபான்மை விவாகரத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
மத்திய சிறுபான்மையினர் விவாகரத்துறை அமைச்சகம் நடத்தும்
26-வது கைவினைப் பொருட்கள் கண்காட்சி, தில்லி ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் பிப்ரவரி 20-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை நடக்கிறது. இதை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்
திரு தர்மேந்திர பிரதான் பிப்ரவரி 21ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதில் 21 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட கலைஞர்கள், கைவினை கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தக் கண்காட்சி நாடு முழுவதும் உள்ள கைவினை பொருட்கள் கலைஞர்களின் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கிறது என்றும் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாகவும் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் நிறைவடைவதை முன்னிட்டு, மத்திய சிறுபான்மை விவகாரத்துறை நடத்தும் 75 கண்காட்சிகள் மூலம் 7 லட்சத்து 50,000 கலைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என மத்திய அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
‘ஹூனர் ஹாட்’ எனப்படும் இந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்களின் சங்கமம், http://hunarhaat.org என்ற இணையதளம் மற்றும் மின்னணு அமைச்சகத்தின் இணையதளத்திலும் மக்கள் பார்வையிட்டு கைவினைப் பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்க முடியும் என திரு முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697908
******
(Release ID: 1697925)
Visitor Counter : 210