சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தடுப்பு மருந்து இருக்கும் காரணத்தால் நாம் அலட்சியத்துடன் இருந்து விடக்கூடாது: டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 08 FEB 2021 4:38PM by PIB Chennai

முகக்கவசங்கள் மற்றும் சோப்புகள் ஆகியவற்றை பல்வேறு போக்குவரத்து சங்கங்களுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கம் வழங்கும் நிகழ்வுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சரும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவருமான டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று தலைமை வகித்தார்.

அப்போது பேசிய அவர், தடுப்புமருந்து இருக்கும் காரணத்தால் நாம் அலட்சியத்துடன் இருந்து விடக்கூடாது என்றும், தற்போதும், இனி வரும் காலத்திலும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் நாமனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.

கொவிட்-19 எதிர்வினை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முகக்கவசங்களை விநியோகிக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாடு முழுவதும் இவற்றை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியே இதுவாகும்,” என்று அமைச்சர் கூறினார்.

ஒட்டுமொத்த உலகத்திலேயே கொவிட் குணமடைதல்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும், பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து 1.48 லட்சம் என்னும் அளவில் தற்போது உள்ளது என்றும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696192

**********************



(Release ID: 1696336) Visitor Counter : 142