பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

ஆதி மகோத்சவ் பழங்குடியினர் திருவிழா: அனைவரையும் கவரும் வட கிழக்கு மாகாணங்களின் கண்கவர் பொருட்கள்

Posted On: 06 FEB 2021 11:43AM by PIB Chennai

தில்லி ஹோட்டில் நடைபெற்றுவரும் ஆதி மகோத்சவ் என்னும் தேசிய பழங்குடியினர் திருவிழாவில் வட கிழக்கு மாகாணங்களின் தனித்துவம் வாய்ந்த பழங்குடியினர் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

மத்திய பழங்குடி விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல், வளர்ச்சி கூட்டமைப்பான டிரைஃபெட், பழங்குடி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், பிரதான வளர்ச்சியை நோக்கி அவர்களை வழிநடத்தும் நோக்கத்துடனும் இந்த கண்காட்சியை நடத்துகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பிரசித்தி பெற்ற பட்டு ஜவுளிகள், நாகாலாந்தின் கோப்பைகள், மணிப்பூரின் கைத்தறி போர்வைகள் போன்றவற்றுடன் அசாம் மாநிலத்தில் மூங்கிலில் தயாரிக்கப்படும் கூடைகள், நாற்காலிகள், அலங்காரப் பொருட்கள், நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் இயற்கைப் பொருட்களான தேன், மூலிகைகள், வாசனைப் பொருட்கள் உள்ளிட்டவை இந்த தேசிய கண்காட்சியில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இடம்பெற்றுள்ளன.

வடகிழக்கு பழங்குடி மக்களின் வளமை மிக்க மற்றும் பிரசித்தி பெற்ற கலாச்சாரத்தை பறைசாற்றும் இந்தத் திருவிழாவில் அந்தப் பகுதியின் பாரம்பரிய உணவு வகைகளும் பார்வையாளர்களின் நாவிற்கு விருந்தளிக்கின்றன.

நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1000 பழங்குடி கலைஞர்கள் பங்கேற்கும் இந்தத் திருவிழா, வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறுவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695745

------



(Release ID: 1695808) Visitor Counter : 207