பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

2021-22ம் நிதியாண்டில், பெரு நிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் தரவு-பகுப்பாய்வு முறை எம்.சி.ஏ 21 பதிப்பு 3.0 தொடங்கப்படும்

Posted On: 05 FEB 2021 3:29PM by PIB Chennai

தரவு-பகுப்பாய்வு முறையை பின்பற்ற, தரவு பகுப்பாய்வுகளால் இயங்கும்எம்.சி. 21 பதிப்பு 3.0-, 2021-22 நிதியாண்டில், பெரு நிறுவன விவகாரத்துறை  அமைச்சகம் (எம்.சி.) அறிமுகப்படுத்தும்.  

இந்த பதிப்பில் மின்னணு-தீர்ப்புகள், மின்னணு-ஆலோசனைகள் மற்றும் இணக்கமான மேலாண்மைக்கான கூடுதல் தொகுதிகள் இருக்கும். எம்சிஏ 21 அமைப்பு என்பது மத்திய அரசின் முதல்  மின்னணு-நிர்வாக   திட்டமாகும்.

எம்சிஏ 21, 3வது பதிப்பு  என்பது தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் முன்னோக்குத் திட்டமாகும்இது அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்கும், தொழில் செய்வதை எளிதாக்குவதற்கும், பயனாளிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், ஒழுங்கு முறையாளர்களிடையே தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் தரவு பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம்  மைக்ரோ-சேவைகள் கட்டமைப்பு, அதிக அளவீட்டுத்தன்மை மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுகளுக்கான திறன்களைக் கொண்டிருக்கும்.

உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடனும், செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்ப உதவியுடனும் உருவாக்கப்பட்ட, எம்சிஏ 21 3வது பதிப்புஇந்தியாவில் பெருநிறுவன  ஒழுங்குமுறை சூழலை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695473

 

----(Release ID: 1695639) Visitor Counter : 224