விண்வெளித்துறை

பிரதமரின் தொலைநோக்கு, விண்வெளித் தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்: டாக்டர் ஜித்தேந்திர சிங் தகவல்

Posted On: 04 FEB 2021 1:41PM by PIB Chennai

மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை  இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

* விண்வெளித் தொழில்நுட்பத்துக்கான பிரதமரின் தொலை நோக்கு, இத்துறையில் இந்தியாவின் ஆற்றலை வெளிப்படுத்தும். தொழில்நுட்ப மேம்பாட்டில் நாட்டை தற்சார்புடையதாக்கும். விண்வெளி தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரியளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

* விண்வெளித்துறையில் தனியார் துறையை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளனவிண்வெளி தொழில்நுட்பத்தில் உலகளாவிய மையமாக இந்தியா இருக்கும். சமூக மேம்பாட்டுக்கு , விண்வெளித் தொழில்நுட்பங்கள் பயன்படும் வகையில் இந்தியா  முக்கியப் பங்காற்றும்.

* பிரதமரின் தொலைநோக்குக் காரணமாக விண்வெளித் தொழில்நுட்பச் சேவைகள், விரைவாகவும், மலிவாகவும் மக்களுக்கு கிடைக்கும்.

இவ்வாறு டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695085

******

(Release ID: 1695085)



(Release ID: 1695122) Visitor Counter : 211