நிதி அமைச்சகம்

13 முக்கியத் துறைகளில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்புத் திட்டங்களை செயல்படுத்த அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கீடு

Posted On: 01 FEB 2021 1:41PM by PIB Chennai

13 முக்கியத் துறைகளில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்புத் திட்டங்களை செயல்படுத்த அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக  மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
 

2021-22 ஆம் நிதியாண்டு முதல் அடுத்த 5 ஆண்டுகளில் முக்கிய துறைகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரவும், உலகளவிலான சாம்பியன்களை உருவாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது.

 

இந்தியாவின் உற்பத்தி நிறுவனங்கள் ஒருங்கிணைந்த உலக விநியோக இணைப்பில் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் எனவும், 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நமது பொருளாதாரத்தை உயர்த்தவும், தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கவும் நமது உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து இரண்டு இலக்கில் தங்களது வளர்ச்சியை நிலைநாட்ட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

 

அதன்படி ஆத்ம நிர்பர் திட்டத்தின் கீழ் 13 முக்கிய துறைகளில் உலகத்தரத்திலான உற்பத்தியை மேம்படுத்த உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அடுத்த 3 ஆண்டுகளில் 7 புதிய ஜவுளிப் பூங்காக்கள்:

 

உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்புத் திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உலகளவில் போட்டி மற்றும் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு, முதலீடுகளை ஈர்க்கும் வகையில், “மிகப் பெரிய முதலீட்டு ஜவுளிப் பூங்காக்கள்” அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

 

இது உலகத்தரத்திலான கட்டமைப்பை மேம்படுத்துவதோடு ஏற்றுமதியில் உலகத்தரத்திலான சாம்பியன்களை உருவாக்கும் எனவும், அடுத்த 3 ஆண்டுகளில் 7 புதிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693886


(Release ID: 1694041) Visitor Counter : 238