சுற்றுலா அமைச்சகம்

‘பாரத் பர்வ் 2021’ தேசியக் கண்காட்சி: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 25 JAN 2021 1:57PM by PIB Chennai

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டுபாரத் பர்வ் 2021’ என்ற மெய்நிகர் தேசியக் கண்காட்சியை மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஜனவரி 26ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

குடியரசு தினவிழாவை முன்னிட்டு, ‘பாரத் பர்வ்என்ற தேசியக் கண்காட்சியை, மத்திய அரசின் சுற்றுலாத்துறை, தில்லி செங்கோட்டை வளாகத்தில்  கடந்த 2016ம் ஆண்டு முதல் நடத்திவருகிறது. ஜனவரி 26ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி  வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பல மாநிலங்களின் கலாச்சாரம், சுற்றுலாத் தலங்கள், கைவினைப் பொருட்கள், உணவுகள் ஆகியவற்றை சித்தரிக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.

கொவிட் தொற்று நெறிமுறைகள் காரணமாக இந்தாண்டுபார்த் பர்வ்’  கண்காட்சி மெய்நிகர் முறையில் நடத்தப்படுகிறது. இதை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு பிரகலத் சிங் படேல் முன்னிலையில், மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா ஜனவரி 26ம் தேதி தொடங்கி வைக்கிறார். www.bharatparv2021.com  என்ற இணையதளத்தில் ஜனவரி 26ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதிவரை இந்நிகழ்ச்சியை பார்க்கலாம்.

இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி, நாட்டுப்பற்றையும், நம் நாட்டின் வளமான பன்முக கலாச்சாரத்தையும் பறை சாற்றுவதோடு, இந்தியாவின் சாரம்சத்தைக் கொண்டாடுகிறது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள்பார்த் பர்வ் நிகழ்ச்சியையும், இந்தியாவின் உண்மையான உணர்வையும் www.bharatparv2021.com என்ற இணையளத்தில் கண்டு மகிழமுடியும்

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692129


(रिलीज़ आईडी: 1692204) आगंतुक पटल : 136
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Telugu , Malayalam