அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தேசிய அறிவியல் தொழில்நுட்ப மற்றும் புதுமை கண்டுபிடிப்பு(எஸ்டிஐபி) வரைவு கொள்கை பற்றி நாட்டின் முன்னணி தலைவர்கள் தங்கள் தொலைநோக்கு கருத்தை தெரிவித்துள்ளனர்

Posted On: 24 JAN 2021 3:41PM by PIB Chennai

ஐந்தாவது தேசிய அறிவியல் தொழில்நுட்ப மற்றும் புதுமை கண்டுபிடிப்பு(எஸ்டிஐபி) வரைவு கொள்கை குறித்த ஆலோசனை, இணைய கருத்தரங்கு மூலம் நேற்று நடத்தப்பட்டது. இதில் நாட்டின் பல துறைகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் தொலை நோக்கு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே விஜயராகவன் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றங்களுடன் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை கணக்கிடும்போது, கலாச்சாரத்தில் நாம்  வேரூன்ற வேண்டும். இதற்கு  மொழி ஆய்வகங்களை வலுப்படுத்த வேண்டும். அதோடு, பெரிய அளவிலான கற்றலுக்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புக்கான  நடைமுறை அமலாக்கமும் முக்கியம்.  இந்த வரைவுக்கொள்கைநாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க எல்லாவற்றையும் கவனத்தில் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இறுதி ஆவணத்தில் கொள்கை நடைமுறை கட்டமைப்பு மற்றும்  உத்தி அமலாக்கத்தை ஒருங்கிணைக்க வேண்டும்’’ என்றார். 

அறிவியல் தொழில்நுட்ப துறை செயலாளர் அசுதோஷ் சர்மா கூறுகையில், ‘‘ எதிர்காலத்துக்கு தயாராக இருக்கபிரச்னைகளுக்கு தீர்வு காண அறிவியல், தொழில்நுட்பம் மற்றும்  புதுமை கண்டுபிடிப்பை பயன்படுத்துவதில் மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதே நேரத்தில் சர்வதேச அறிவியல் துறை இணைப்பிலும், சமஅளவு கவனம் தேவை. இந்தியாவில், ஏற்கனவே உருவாக்கப்பட்ட அறிவியலில் கவனம் செலுத்துகிறோம். அதை முறையாக புரிந்து கொண்டு, புதுமை கண்டுபிடிப்புகளை கொண்டு வர வேண்டும்’’ என்றார். 

மாநிலங்களவை முன்னாள் தலைமை செயலாளர் திரு யோகேந்திர நரையன் கூறுகையில், ‘‘ஆராய்ச்சிகளை மேற்பார்வையிடுபவர்களுக்கு  பயிற்சி தேவை மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்’’ என்றார்.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய தலைமை இயக்குனர் டாக்டர் சுனிதா நரையன் பேசுகையில், சமூக அறிவியலை மக்களுடன் ஈடுபடுத்த வேண்டும். வெள்ளம் மற்றும் புயல் முன்னெச்சரிக்கைகளை மக்கள் அறிந்து கொள்வதுபோல், இந்திய அறிவியலை மக்களுடன் தொடர்பு படுத்துவதை அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.

இந்திய மேம்பட்ட ஆய்வுகள் மையத்தின் இயக்குனர்  மகரந்த் ஆர் பரன்ஜேப் கூறுகையில், ‘‘ எஸ்டிஐபி கொள்கையில் அறிவியல் துறையின் அனைத்து பிரிவுகளின் ஒருங்கிணைப்பை இணைக்க வேண்டும், சிறப்பு மையங்களை நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

 இந்த எஸ்டிஐபி வரைவு கொள்கை, பொது மக்கள் ஆலோசனைக்காக கடந்த 2020 டிசம்பர் 31ம் தேதி வெளியிடப்பட்டது. ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பெற பல ஆலோசனைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டன. இந்த தொடர் ஆலோசனைகள் அடுத்த 2 வாரங்களுக்கும் திட்டமிடப்பட்டுள்ளன. கருத்துக்களை பெறுவதற்கான கடைசி நாள் 2021 ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691875

**********************


(Release ID: 1691886) Visitor Counter : 335