சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு தடுப்புமருந்து வழங்கப்பட்டுள்ளது


தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தின் எட்டாம் நாளில் மாலை 6 மணி வரை 1,46,598 பயனாளிகளுக்கு தடுப்புமருந்து வழங்கப்பட்டுள்ளது

Posted On: 23 JAN 2021 7:31PM by PIB Chennai

நாடு தழுவிய மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் எட்டாம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. கொரோனா தடுப்பு மருந்தை இது வரை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது.

27,776 முகாம்களில் 15,37,190 சுகாதார பணியாளர்களுக்கு இன்று மாலை 6 மணி வரை வரை தடுப்பு மருந்து வழங்கப்பட்டு உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை 6 மணி வரை 3,368 முகாம்கள் நடைபெற்றன.

 

எட்டாம் நாளான இன்று நாடு முழுவதும் 1,46,598 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 4,642 நபர்களுக்கு இன்று தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. இறுதி தகவல்கள் இன்று பின்னிரவு கிடைக்கும்.

தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்களில் 123 பேருக்கு சிறிய அளவிலான உபாதைகள் ஏற்பட்டதாக இன்று மாலை 6 மணி வரை தெரிவிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் ஆறு நபர்கள் இறந்துள்ள நிலையில

இவர்களில் யாருடைய இறப்புக்கும் தடுப்பு மருந்து காரணமில்லை என்று தெரியவந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691661

**********************


(Release ID: 1691711) Visitor Counter : 195