குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

தடுப்பூசி பரிசோதனை மற்றும் சான்றிதழ் மையத்தை ஐதராபாத்தில் அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர் கோரிக்கை

Posted On: 21 JAN 2021 1:53PM by PIB Chennai

தடுப்பூசி பரிசோதனை மற்றும் சான்றிதழ் மையத்தை ஐதராபாத்தின் ஜெனோம் பள்ளத்தாக்கு பகுதியில்  அமைக்க வேண்டும் என தெலங்கானா அரசு விடுத்துள்ள வேண்டுகோளைமத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனிடம்  குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தெலங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர்  திரு கே.டி.ராமா ராவ் விடுத்துள்ள வேண்டுகோளையும் திரு.வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு, திரு ராமா ராவ் எழுதியுள்ள கடிதத்தில், ஐதரபாத்தில் ஆண்டுக்கு 6 பில்லியனுக்கும்  மேற்பட்ட தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதாகவும்இது உலகளவிலான தடுப்பூசி தயாரிப்பில், மூன்றில் ஒரு பங்கு எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வேண்டுகோளை பரிசீலிப்பதாக, குடியரசுத் துணைத் தலைவருக்கு டாக்டர் ஹர்ஷ் வர்தன் உறுதியளித்தார்.  இமாச்சல் பிரதேசம் கவுசாலி உட்பட உலகத்தில் மொத்தம் 7 தடுப்பூசி பரிசோதனை மையங்கள் உள்ளதாகவும், இந்த மையம் அமைப்பதற்கு சர்வதேச அமைப்பிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவரிடம் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690809

*****************


(Release ID: 1691004)