பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவ ஒத்துழைப்பு குறித்து இந்தோனேஷிய பாதுகாப்பு அமைச்சருடன், அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை

Posted On: 21 JAN 2021 5:44PM by PIB Chennai

ராணுவ ஒத்துழைப்பு குறித்து, இந்தோனேஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர்   ஜெனரல் பிரபோவோ சுபியாந்தோவுடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று போனில் பேசினார். 

கொவிட்-19 கட்டுப்பாடுகள் உள்ள போதிலும், இரு நாடுகள் இடையேயோன ராணுவ ஒத்துழைப்பு திருப்திகரமாக இருப்பதாக இருவரும் தெரிவித்தனர். பிராந்திய பாதுகாப்பு நிலவரம் குறித்தும், சட்ட விதிகளின் அடிப்படையில் சுதந்திரமான கடல் போக்குவரத்தின் அவசியம் குறித்தும் இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.  இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்தும் இரு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர். இருதரப்பு ராணுவ உறவுகளை வலுப்படுத்தவும், ராணுவ தொழில்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை ஒத்துழைப்பை  மேலும் அதிகரிக்கவும் அமைச்சர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

**********************(Release ID: 1690981) Visitor Counter : 16