பாதுகாப்பு அமைச்சகம்

‘டெசர்ட் நைட்-21’: இந்தியா-பிரான்ஸ் விமானப்படைகளின் கூட்டுப் பயிற்சி

Posted On: 19 JAN 2021 11:22AM by PIB Chennai

இந்திய விமானப்படை, பிரான்ஸ் வான் மற்றும் விண் படை ஆகியவை இணைந்துடெசர்ட்  நைட்-21’ (பாலைவன வீரன்) என்ற பெயரில், கூட்டுப் பயிற்சியை, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில்  நாளை முதல் ஜனவரி 24ம் தேதி வரை மேற்கொள்கின்றன.

பிரான்ஸ் தரப்பில் ரபேல், ஏர்பஸ் -330 டேங்கர், -400 எம் போக்குவரத்து விமானம் மற்றும் 175 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்இந்திய விமானப்படை சார்பில் மிராஜ்-2000, சுகாய், ரபேல், ஐஎல்-78, அவாக்ஸ்  மற்றும் ஏஇடபிள்யூ&சி விமானங்கள் பங்கேற்கின்றன.

இருநாட்டு விமானப்படைகளுக்கு இடையிலான  கூட்டு பயிற்சித் தொடரில் இந்தப் பயிற்சி ஒரு முக்கிய மைல் கல். இந்தியா-பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இரு நாட்டு விமானப்படைகளும், கருடா என்ற பெயரில் 6 முறை கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு கருடா போர் பயிற்சி, பிரான்ஸ் நாட்டின் மான்ட்-டே-மர்சன் விமானப்படை தளத்தில் நடந்தது. இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த, இரு நாட்டு விமானப்படைகளும்டெசர் நைட்-21’ பயிற்சியை மேற்கொள்கின்றன

இந்த கூட்டுப் பயிற்சியில் இரு நாட்டுப் படைகளும் ரபேல் விமானங்களை ஈடுபடுத்துவதால், இந்தப் பயிற்சி தனிச் சிறப்பானதுஇரு நாட்டு விமானப்படைகளும் கூட்டுப் பயிற்சியை ஜனவரி 20ம் தேதி முதல் தொடங்குவதால், பல்வேறு பகுதிகளில் பெற்ற செயல்பாடு அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் கருத்துக்களை பயிற்சியில் ஈடுபடுத்துவர்.

-----


(Release ID: 1689968) Visitor Counter : 269