உள்துறை அமைச்சகம்
கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா
प्रविष्टि तिथि:
17 JAN 2021 5:41PM by PIB Chennai
கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தொடங்கி வைத்தார்
கர்நாடக மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று சர்க்கரை ஆலை விரிவாக்க திட்டம், மற்றும் விஜயா வங்கியின் 75வது கிளை ஆகியவற்றை அவர் தொடங்கி வைத்தார். ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் வேளாண் திட்டங்கள் பலவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அமித்ஷா, பிரதமர் திரு. நரேந்திர மோடி தற்சார்பு இந்தியாவை உருவாக்க மிகப் பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளார் என்றும் எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான உறுதியான முடிவுகளை எடுத்துள்ளார் என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் திரு பிரகலத் ஜோஷி, கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689397
------
(रिलीज़ आईडी: 1689529)
आगंतुक पटल : 223