தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது, பழம்பரும் நடிகர்-இயக்குநர் பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு விருது

Posted On: 16 JAN 2021 4:45PM by PIB Chennai

திரைப்படங்கள் வழங்கும் மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா சிறப்பான கலாச்சார நிகழ்ச்சிகளோடு இன்று தொடங்கியது.

கோவாவில் உள்ள டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குநர்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து திரைப்பட அபிமானிகள் கலந்து கொண்டனர்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், கோவா முதல்வர் திரு பிரமோத் சவந்த், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன் நாயர் மற்றும் நடிகர் சுதீப் ஆகியோர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு ஜவடேகர், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக 600 சர்வதேச விண்ணப்பங்களும், 190 இந்திய விண்ணப்பங்களும் இந்த வருடம் வந்திருப்பது, உலகம் இத்திருவிழாவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை குறிக்கிறது என்றார்.

மற்ற நாடுகளை போலில்லாமல், படப்பிடிப்பிற்கு உகந்த பல்வேறு இடங்கள் இந்தியாவில் உள்ளதென்றும், என்வே நாம் ‘ஷூட் இன் இந்தியா’வை ஊக்குவிக்க வேண்டுமென்றும் அவர் மேலும் கூறினார்.

புகழ்பெற்ற இந்தி மற்றும் வங்க திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் பாடகரான திரு பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு சிறந்த இந்தியருக்கான விருது வழங்கப்படும் என 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செய்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், இந்த வருடம் மார்ச் மாதம் வழங்கப்படவிருக்கும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இவ்விருது திரு பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கில செய்திக் குறிப்புகளை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689089

-----(Release ID: 1689202) Visitor Counter : 160