அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தேசிய புதுமை கண்டுபிடிப்புகள் அமைப்பு உருவாக்கியுள்ள புதுமை கண்டுபிடிப்புகள் தளத்தை டாக்டர் ஹர்ஷ்வர்தன் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

Posted On: 14 JAN 2021 5:38PM by PIB Chennai

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி பெற்ற நிறுவனமான தேசிய புதுமை கண்டுபிடிப்புகள் அமைப்பு உருவாக்கியுள்ள புதுமை கண்டுபிடிப்புகள் தளத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் புது தில்லியில் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பொறியியல், வேளாண்மை, கால்நடை, மனித ஆரோக்கியம் உள்ளிட்ட துறைகளில் நாட்டின் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 1.15 லட்சம் புதுமை கண்டுபிடிப்புகளை தேசிய புதுமை கண்டுபிடிப்புகளுக்கான தளம் தற்போது தன்னகத்தே கொண்டுள்ளது.

எரிசக்தி, இயந்திரவியல், வாகனங்கள், மின்சாரம், மின்னணு, வீட்டு சாதனப் பொருட்கள், ரசாயனம், சிவில், ஜவுளி, வேளாண்/விளைச்சல் நடைமுறைகள், சேமிப்பு வழிமுறைகள், செடி வகைகள், தாவர பாதுகாப்பு, கோழிப்பண்ணை, கால்நடை மேலாண்மை, ஊட்டச்சத்துகள் உள்ளிட்ட துறைகளிலும் தற்போது புதுமை கண்டுபிடிப்புகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், புதுமை கண்டுபிடிப்புகளுக்கான இயக்கத்தை தொடங்கி அதற்கான சூழலியலை கடந்த ஆறு வருடங்களாக உருவாக்கியுள்ள பிரதமரையே அனைத்து பெருமைகளும் சேரும் என்றார். தங்களது படைப்புத்திறன் மூலமும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் மூலமும் சிக்கல்களையும் சவால்களையும் தோற்கடித்த தற்சார்பு குடிமக்களை அவர் பாராட்டினார்.

தனித்து விளங்கும் பாரம்பரிய அறிவு, குறிப்பாக பழங்குடியினரின் பகுதிகளிலிருந்து

வரும் மூலிகை பழக்கங்களுக்கு அதிகரித்து வரும் முக்கியத்துவம் குறித்து பேசிய அமைச்சர் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான தளத்தின் முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார்.

உள்ளூர் பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் கண்டுபிடிக்கும் புதிய தீர்வுகளை நிறுவனமயமாக்குவதற்கு இந்த தளம் உதவும் என்று அவர் கூறினார். புதுமை கண்டுபிடிப்புகள் மீது பொதுமக்களுக்கு உள்ள சிறப்பான உறுதியை பாராட்டிய டாக்டர் ஹர்ஷ்வர்தன், நாட்டின் தொழில்நுட்ப தலைமைத்துவத்தை இது வளர்த்து வரும் வருடங்களில் புதிய உயரங்களை எட்ட செய்யும் என்றார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா, தேசிய புதுமை கண்டுபிடிப்புகளுக்கான அமைப்பின் தலைவர் டாக்டர் பி எஸ் கோயல் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688583

***



(Release ID: 1688673) Visitor Counter : 235