தேர்தல் ஆணையம்

தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்துடன் மத்திய உள்துறை செயலாளர் ஆலோசனை

Posted On: 12 JAN 2021 5:04PM by PIB Chennai

மத்திய உள்துறைச் செயலாளர் திரு அஜய் பல்லாவுடன் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் அதன் தலைமை அலுவலகத்தில் இன்று (2021 ஜனவரி 12) நடத்தியது.

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஈடுபடுத்தப்பட உள்ள மத்திய துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687956

***


(Release ID: 1688002) Visitor Counter : 145