பாதுகாப்பு அமைச்சகம்

1971 பங்களாதேஷ் விடுதலைப் போர்: ஆன்லைன் வினாடி-வினாப் போட்டி

Posted On: 11 JAN 2021 6:05PM by PIB Chennai

1971 பங்களாதேஷ் விடுதலைப் போர் பற்றிய  ஆன்லைன் வினாடி-வினா போட்டியை பாதுகாப்புத்துறை அமைச்சகம் நடத்துகிறது.

குடியரசு தின விழா 2021 கொண்டாட்டம் மற்றும் 1971 பங்களாதேஷ் விடுதலைப் போரின் 50 ஆண்டுகள்  நிறைவை நினைவு கூறும் வகையில், ஆன்லைன் வினாடி வினாப் போட்டியை பாதுகாப்புத்துறை அமைச்சகம், மைகவ் இணையளத்துடன் இணைந்து ஜனவரி 11ம் தேதி முதல் ஜனவரி 22ம் தேதி வரை நடத்துகிறது. மக்களிடையே  நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தவும், 1971ம் ஆண்டு போர் வெற்றியின் பல்வேறு அம்சங்களையும்,  தியாகத்தையும் மக்கள் அறியச் செய்வதே இந்த வினாடி வினா போட்டியின் நோக்கம்.

இதில் 10 ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது ரொக்க பரிசுகளுடன் 7 ஆறுதல் பரிசுகளும்  வழங்கப்படும்.  அவற்றின் விவரம்:

 முதல் பரிசு ரூ.  25,000/

2வது பரிசு ரூ. 15,000/

3வது பரிசு ரூ. 10,000/.

ஆறுதல் பரிசுகள் (ஏழுபேருக்கு தலா) ரூ. 5,000/-

14 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் இந்த வினாடி வினாப் போட்டியில் பங்கேற்கலாம்.

இந்த வினாடிப் போட்டியில் கலந்து கொள்ள மைகவ் இணையதளத்தின் கீழ்கண்ட இணைப்பைப் பாருங்கள் :  :https://quiz.mygov.in/quiz 1971-bangladesh-liberation-war-quiz/

------


(Release ID: 1687730) Visitor Counter : 281