தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவின் கவனிக்கத்தக்க நாடு: வங்கதேசம்

प्रविष्टि तिथि: 11 JAN 2021 1:09PM by PIB Chennai

இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் கவனிக்கத்தக்க நாடு அறிவிக்கப்பட்டுள்ளது. 51- ஆவது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் கவனிக்கத்தக்க நாடாக  வங்கதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தலைசிறந்த திரைப்படங்களுக்கு நாடு வழங்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் கவனிக்கத்தக்க நாடு என்னும் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் 51-ஆவது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் 4 திரைப்படங்கள் திரையிடப்படும்:

1.    தன்வீர் மொகமெல்லின் ஜிபோன்துலி

2.    சஹிதுர் ரஹீம் அஞ்சனின் மெக்மல்லர்

3.    ரூபையாத் ஹொசைனின் அண்டர் கன்ஸ்டிரக்ஷன்

4.    நுஹாஷ் ஹுமாயுன்,  சையத் அஹமத் ஷாகி,  ரகத் ரஹ்மான் ஜாய்,  எம் டி ரொபியுல் அலாம், கொலாம்கிப்ரியாஃபரூகி, மிர் முகர்ரம் ஹொசைன், தன்வீர் அஹ்சான், மஹ்முதுல் இஸ்லாம், அப்துல்லா அல் நூர், கிரிஷ்ணெண்டு சடோபாத்யே, சையத் சலேஹ் அஹமத் சோபன் ஆகியோரின் சின்ஸியர்லி யுவர்ஸ், தாக்கா 51-ஆவது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா வரும் 16 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687596

************************


(रिलीज़ आईडी: 1687671) आगंतुक पटल : 238
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , हिन्दी , Marathi , Punjabi , Bengali , English , Urdu , Manipuri , Telugu