வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

2015ம் ஆண்டிலிருந்து வர்த்தக மற்றும் பொருளாதார சூழலை மேம்படுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு உலக வர்த்தக சங்க உறுப்பினர்கள் பாராட்டு

Posted On: 08 JAN 2021 5:53PM by PIB Chennai

2015ம் ஆண்டிலிருந்து வர்த்தக மற்றும் பொருளாதார சூழலை மேம்படுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு உலக வர்த்தக சங்கம் உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் ஏழாவது வர்த்தக கொள்கை மீளாய்வின் இரண்டாவது மற்றும் இறுதி கூட்டம், ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பில்  இன்று நிறைவடைந்தது.

இந்தியக் குழுவுக்கு வர்த்தக துறை செயலாளர் டாக்டர் அனுப் வாதவன் தலைமை தாங்கினார். உலக வர்த்தக உறுப்பினர்கள் இடையே அவர் பேசுகையில், ‘‘ கடந்த 6ம் தேதி நடந்த வர்த்தக கொள்கையின் முதல் கூட்டத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்னைகளுக்கு பதில் அளித்தார். இந்தியாவின் பங்கில் உலக வர்த்தக சபை உறுப்பினர்கள் வைத்துள்ள முக்கியத்துவம் மற்றும் உலக வர்த்தகத்துக்கு ஆற்றும் பங்களிப்பை பாராட்டினார்.  இந்த கூட்டத்தில் 1050க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன. 

இந்தியாவில் சீர்திருத்தங்கள தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும், இந்தியாவை வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஈர்க்கும் வகையில் மாற்ற மத்திய அரசு உறுதியுடன் செயல்படுவதாக வர்த்தகத்துறை செயலாளர் தெரிவித்தார்.

கடந்த 2015ம் ஆண்டிலிருந்து வர்த்தக மற்றும் பொருளாதார சூழலை மேம்படுத்த இந்தியா மேற்கொள்ளும்  முயற்சிக்கு உலக வர்த்தக சங்கம் உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

**********************



(Release ID: 1687205) Visitor Counter : 249