வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதிகள்: பூட்டான் வணிகர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை

Posted On: 08 JAN 2021 1:07PM by PIB Chennai

இந்தியாவின்  வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுதியை ஊக்குவிக்கும் வகையில், இதற்கான வளர்ச்சி ஆணையம் (அபெடா), பூட்டானில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்துவணிகர்களுடனான காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டத்தைக் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி நடத்தியது.  வேளாண் உணவுத் துறையில், இந்தியா - பூட்டான் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாட்டு அரசுகள் மற்றும் வர்த்தக பிரிவினரை பொதுவான தளத்தின் கீழ் இந்த வர்த்தகக் கூட்டம் ஒன்றிணைத்தது. 

பல நாடுகளின் வர்த்தகர்களுடன் அபெடா அமைப்பு நடத்தும் 15-வது காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில் பூட்டான் உணவு கழகம், பூட்டான் வேளாண் மற்றும் வன அமைச்சகம், காய்கறி மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்யும் இந்திய வர்த்தக சங்கங்கள்அகில இந்திய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் சங்கம், அகில இந்திய மாமிச மற்றும் கால்நடை  ஏற்றுமதியாளர்கள் சங்கம், அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியவை தரப்பில் தேவைகள் குறித்தும், ஏற்றுமதி  பொருட்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687044

**********************



(Release ID: 1687142) Visitor Counter : 178