தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: போட்டியிடும் திரைப்படங்கள்

Posted On: 07 JAN 2021 4:46PM by PIB Chennai

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் சர்வதேச போட்டியில் பங்குபெறும் திரைப்படங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பிரிவில் போட்டியிடுவதற்காக உலகெங்கிலும் இருந்து திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. வருடத்தின் சிறந்த திரைப்படங்கள் பங்குபெறும் இத்திருவிழாவின் முக்கிய பிரிவுகளில் ஒன்றான இதில், தங்க மயில் மற்றும் இதர விருதுகளுக்காக 15 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.

வரிசையில் இடம்பெற்றுள்ள திரைப்படங்கள் வருமாறு :

 

1. டியாகோ குயிட்ஸின் தி டொமைன் (போர்ச்சுகல்)

2. ஆண்டெர்ஸ் ரெஃப்னின் இன்டூ தி டார்க்னெஸ் (டென்மார்க்)

3. காமென் காலெவ்வின் பிப்ரவரி (பல்கேரியா, பிரான்ஸ்)

4. நிக்கோலஸ் மவுரியின் மை பெஸ்ட் பார்ட் (பிரான்ஸ்)

5. பியாட்ர் டோமாலெவ்ஸ்கியின் நெவர் க்ரை (போலாந்து, அயர்லாந்து)

6. லியார்னடோ மெடெல்லின் லா வெரோனிகா (சிலி)

7. ஷின் சு-வொன்னின் லைட் ஃபார் தி யூத் (தென் கொரியா)

 

8. லோயிஸ் பாட்டினோவின் ரெட் மூன் டைட் (ஸ்பெயின்)

9. அலி காவித்தானின் ட்ரீம் அபவுட் சோஹ்ரப் (ஈரான்)

10. ரமின் ரசவுலியின் தி டாக்ஸ் டிடின்ட் ஸ்லீப் லாஸ்ட் நைட் (ஆஃப்கானிஸ்தான், ஈரான்)

11. கோ சென்-நியென்னின் தி சைலண்ட் ஃபாரஸ்ட் (தாய்வான்)

12. டாரிய ஒனிஷ்சென்கோவின் தி ஃபர்காட்டென் (உக்ரேன், ஸ்விட்சர்லாந்து)

13. கிரிபால் கலித்தாவின் பிரிட்ஜ் (இந்தியா)

14. சித்தார்த் திரிபாதியின் டாக் அண்ட் ஹிஸ் மேன் (இந்தியா)

15. கணேஷ் விநாயகனின் தாயென் (இந்தியா)

கீழ்கண்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகளுக்காக இந்த திரைப்படங்கள் போட்டியிடும்:

1. சிறந்த திரைப்படம் (தங்க மயில்) - ரூ 40,00,000 பரிசுத்தொகையை இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். பரிசுத் தொகையை தவிர, தங்க மயிலும், சான்றிதழும் இயக்குநருக்கு கிடைக்கும்தயாரிப்பாளருக்கு பரிசுத் தொகையை தவிர சான்றிதழ் கிடைக்கும்

2. சிறந்த இயக்குநர்: வெள்ளி மயில், சான்றிதழ், ரூ 15 லட்சம் பரிசுத் தொகை

3. சிறந்த நடிகர்: வெள்ளி மயில், சான்றிதழ், ரூ 10 லட்சம் பரிசுத் தொகை

4. சிறந்த நடிகை: வெள்ளி மயில், சான்றிதழ், ரூ 10 லட்சம் பரிசுத் தொகை

5. சிறப்பு நடுவர் விருது: வெள்ளி மயில், சான்றிதழ், ரூ 15 லட்சம் பரிசுத் தொகை ஒரு திரைப்படத்திற்கோ (நடுவர்கள் பாராட்ட விரும்பும் ஏதேனும் ஒரு விஷயத்திற்காக), அல்லது தனிநபருக்கோ (திரைப்படத்திற்கு அவரது பங்களிப்பிற்காக) வழங்கப்படும். ஒரு வேளை திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டால், அதன் இயக்குநருக்கு அது வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686794

**


(Release ID: 1686835) Visitor Counter : 309