ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே முன்பதிவு மைய பயணச்சீட்டுகள் ரத்து : கால வரம்பு 9 மாதங்கள் வரை நீட்டிப்பு

Posted On: 07 JAN 2021 3:28PM by PIB Chennai

2020 மார்ச் 21ம் தேதி முதல் 2020ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வரையிலான பயண காலத்தில், முன்பதிவு மையங்களில் வாங்கிய ரயில் பயணச் சீட்டுகளை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான கால வரம்பை, பயண தேதியிலிருந்து ஒன்பது மாதம் வரை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதுரயில்வே ரத்து செய்த, கால அட்டவணைப் பட்டியலில் உள்ள வழக்கமான ரயில்களுக்கு மட்டும் இது பொருந்தும்ஒருவேளை பயணச் சீட்டு 139 என்ற எண் மூலமோ அல்லது ஐஆர்சிடிசி இணையதளம் மூலமோ ரத்து செய்யப்பட்டால், மேலே குறிப்பிட்ட  பயண காலத்துக்கான டிக்கெட்டுகளை, முன்பதிவு மையங்களில் ஒப்படைப்பதற்கான காலவரம்பும், பயண தேதியிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

பயண தேதியிலிருந்து ஆறு மாதங்கள் முடிந்த பிறகுபல பயணிகள், பயணச்சீட்டுகளை ரயில்வே மண்டல அலுவலகத்திலோ அல்லது டிடிஆர் மூலமாகவோ அல்லது பொது விண்ணப்பம் மூலமாகவோ தாக்கல் செய்திருக்கலாம்முன்பதிவு மையங்களில் வாங்கிய அந்த பயணசீட்டுகளுக்கு, பயணிகள் முழு கட்டணத்தையும் திரும்பப் பெற அனுமதிக்கப்படுவர்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686772

******

(Release ID: 1686772)(Release ID: 1686806) Visitor Counter : 215