வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
ஜம்மு காஷ்மீர், வடகிழக்கில் சாலை, பாலப் பணிகள் : அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிற்கு விளக்கம்
प्रविष्टि तिथि:
05 JAN 2021 5:55PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு சாலை மற்றும் பாலப் பணிகள் குறித்து மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), டாக்டர் ஜிதேந்திர சிங்கிற்கு எல்லையோர சாலைகள் அமைப்பின் தலைமை இயக்குநர் லெப்டினெண்ட் ஜெனரல் ராஜீவ் சௌத்ரி இன்று விளக்கினார்.
கடந்த ஐந்தாறு வருடங்களில் சாலை, பாலங்களின் கட்டுமானத்தில் இது வரை இல்லாத அளவிற்கு முன்னேற்றத்தை ஜம்மு காஷ்மீர் கண்டிருப்பதாகவும், உதம்பூர்- கத்துவா- டோடா நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் எல்லையோர சாலைகள் அமைப்பால் ஒரு டஜன் பாலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜெனரல் சௌத்ரி அமைச்சரிடம் கூறினார். பசோலியில் அடல் பாலமும், உதம்பூரில் தேவிகா பாலமும் இதில் குறிப்பிடத்தகுந்தவை என்று அவர் தெரிவித்தார்.
**********************
(रिलीज़ आईडी: 1686313)
आगंतुक पटल : 191