பாதுகாப்பு அமைச்சகம்
குடியரசு தின முகாமை தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினெண்ட் ஜெனரல் தருண் குமார் எய்ச் துவக்கி வைத்தார்
Posted On:
04 JAN 2021 6:29PM by PIB Chennai
தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாம்-2021-ஐ தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினெண்ட் ஜெனரல் தருண் குமார் எய்ச் புதுதில்லி கண்டோண்ட்மெண்ட்டில் இன்று துவக்கி வைத்தார். அனைத்து மத வழிபாட்டுடன் விழா தொடங்கியது.
380 பெண்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள 17 மாநில இயக்குநரகங்களில் இருந்து வந்த 500 ஆதரவுப் பணியாளர்கள் உட்பட 1,000 பேர் இந்த முகாமில் பங்கேற்கின்றனர். 2021 ஜனவரி 28 அன்று பிரதமரின் பேரணியுடன் இந்த முகாம் நிறைவடையும்.
விழாவில் பேசிய லெப்டினெண்ட் ஜெனரல் தருண் குமார் எய்ச், உயரிய நற்பண்புகள், முதிர்ச்சி மற்றும் தன்னலமில்லா சேவையை வெளிப்படுத்தி, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தையின் உயரிய நிலைகளோடு செயலாற்றி, பிராந்தியம், மொழி, ஜாதி மற்றும் இன வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று தேசிய மாணவர் படையினரைக் கேட்டுக்கொண்டார்.
தேசிய மாணவர் படையினரின் தன்னம்பிக்கையை மேம்படுத்தி, மதிப்புகளை ஆழப்படுத்தி, நமது வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்த புரிதலை அவர்களுக்கு வழங்குவதே இந்த முகாமின் நோக்கம் என்று அவர் கூறினார்.
ஒரு மாதம் நடைபெறவுள்ள இம்முகாமில் முழு மனதுடன் பங்கேற்று, அதன் முழுப்பலன்களையும் அடையுமாறு தேசிய மாணவர் படையினரை கேட்டுக்கொண்ட தலைமை இயக்குநர், கொவிட்-19 விதிமுறைகளையும் தவறாமல் பின்பற்றுமாறு அவர்களை வலியுறுத்தினார்.
**********************
(Release ID: 1686106)
Visitor Counter : 185