அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
டிஎன்ஏ அடிப்படையிலான கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனைக்கு ஒப்புதல்
Posted On:
03 JAN 2021 5:51PM by PIB Chennai
டிஎன்ஏ அடிப்படையில், ஜைடஸ் கேடிலா நிறுவனம் தயாரிக்கும் கோவிட்-19 தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனைக்கு, இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
டிஎன்ஏ அடிப்படையில் கோவிட்-19 தடுப்பூசியை ஜைகோவிட் என்ற பெயரில் ஜைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்த பரிசோதித்து வருகிறது. இது இந்தியாவில் டிஎன்ஏ அடிப்படையில் தயாரிக்கப்படும் முதல் தடுப்பூசி. இதற்கு தேசிய பயோபார்மா திட்டம் மற்றும் மத்திய அரசின் உயிரி தொழில்நுட்ப துறை ஆகியவை உதவி அளித்து வருகின்றன.
இந்தியாவில் 1000க்கும் மேற்பட்டவர்களிடம் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை ஜைடஸ் கேடிலா நிறுவனம் முடித்து விட்டது. இதன் பாதுகாப்பு மற்றும் எதிர்ப்பு சக்தி நன்றாக இருப்பதாக இடைக்கால அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து இந்த தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனையை, இந்தியாவில் 26,000 பேரிடம் மேற்கொள்ள இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த உயிரி தொழில்நுட்ப துறை செயலாளர் டாக்டர் ரேணு ஸ்வரூப், ‘‘ இந்த தடுப்பூசி தொடர்ந்து சாதகமான முடிவுகளை தெரிவிக்கும். நாட்டின் முதல் டிஎன்ஏ தடுப்பூசி தளம் அமைக்கப்பட்டது, தற்சார்பு இந்தியா திட்டத்தின் முக்கியமான மைல்கல். இது இந்திய அறிவியல் ஆராய்ச்சியில் மிகப் பெரிய முன்னேற்றம்’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685838
-----
(Release ID: 1685866)
Visitor Counter : 333