பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடி பொருட்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ட்ரைஃபெட், வடகிழக்கு மாகாண வளர்ச்சிக்கான அமைச்சகம், இந்தியா போஸ்ட்
Posted On:
03 JAN 2021 12:32PM by PIB Chennai
பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், பழங்குடி விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு (ட்ரைஃபெட்), இதர அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் வட கிழக்கு மாகாணங்களின் பழங்குடி பொருட்களை ஊக்குவிக்குவிப்பதற்காக வடகிழக்கு மாகாண வளர்ச்சிக்கான அமைச்சகம் மற்றும் இந்தியா போஸ்ட் ஆகியவற்றுடன் இணைந்து ஓர் திட்ட முன்மொழிவை வகுத்துள்ளது.
வடகிழக்கு பகுதிகளின் செழிப்பான மற்றும் பாரம்பரிய பொருட்களுக்கென பிரத்தியேக அடையாளத்தை உருவாக்கி, அதன் வாயிலாக சர்வதேச அளவில் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் அந்தப் பொருட்களை விநியோகிப்பது இந்த முன்முயற்சியின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் வாயிலாக பழங்குடி மக்களின் வருவாய் அதிகரிப்பதுடன், தற்சார்பு இந்தியா, உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவித்தல், பழங்குடியினரிடமிருந்து வாங்குதல் போன்ற திட்டங்களும் வலுவடையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685771
------
(Release ID: 1685859)
Visitor Counter : 210