மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுத் தேதிகளை அறிவித்தார் மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’


10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள், 2021 மே 4ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது

Posted On: 31 DEC 2020 6:31PM by PIB Chennai

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுத் தேதிகளை மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ இன்று அறிவித்தார்.  சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள், 2021 மே 4ஆம் தேதி முதல் 2021 ஜூன் 10ஆம் தேதி வரை நடக்கும் எனவும், தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி அறிவிக்கப்படும்  என திரு. ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ கூறினார்.   12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் 2021 மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என அவர் மேலும் கூறினார்.

கோவிட்-19 தொற்று காரணமாக, மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் இதுவரை சந்திக்காத நிச்சயமற்ற சூழ்நிலையையைச் சந்திப்பதாகவும், ஆனால், மாணவர்கள் தங்கள் படிப்பில் எந்தச் சிக்கலையும் சந்திக்காமலிருப்பதை உறுதி செய்வதற்காக ஆசிரியர்கள் அயராது  உழைத்துள்ளனர் என திரு. ரமேஷ் பொக்ரியால் கூறினார்.  கடினமாக உழைத்ததற்காகவும், கல்வி கற்பிப்பதில் புதிய நடைமுறையை பின்பற்றியதற்காகவும், அவர் ஆசிரியர்களை பாராட்டினார். டிஜிட்டல் முறையில் கல்வி கற்பதற்கான தளத்தை வழங்க அரசும் பல நடவடிக்கைகள் எடுத்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் தெரிவித்த ஆலோசனைகளை கருத்தில் கொண்டு, பொதுத் தேர்வு தேதிகள் குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக திரு. ரமேஷ் பொக்ரியால் கூறினார்.

புத்தாண்டை முன்னிட்டு தனது  வாழ்த்துக்களைத் தெரிவித்த அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால்பொதுத் தேர்வில் மாணவர்கள் சிறந்த வெற்றி பெறவும், வாழ்வில் முன்னேறவும் வாழ்த்தினார். 

**********************


(Release ID: 1685221) Visitor Counter : 221