மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுத் தேதிகள்: மத்திய கல்வி அமைச்சர் நாளை அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 30 DEC 2020 3:16PM by PIB Chennai

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கும் தேதிகளை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்நாளை (டிசம்பர் 31) மாலை ஆறு மணிக்கு அறிவிப்பார்.‌ இதனை அமைச்சர் தனது சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தெரிவித்த கருத்துக்களைப் பரிசீலனை செய்து அதன் படி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 2021 பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று முன்னதாக, ஆசிரியர்களுடன் காணொலி வாயிலாக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. பொக்ரியால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684618

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1684817) வருகையாளர் எண்ணிக்கை : 131
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi