மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
திஹான்-ஐஐடி ஹைதராபாத்'துக்கு மத்திய கல்வி அமைச்சர் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்
Posted On:
29 DEC 2020 4:00PM by PIB Chennai
தானியங்கி போக்குவரத்து அமைப்புகளுக்கான (தரை மற்றும் வான்வழி) இந்தியாவின் முதல் சோதனைத் தளமான 'திஹான்-ஐஐடி ஹைதராபாத்'துக்கு மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
மத்திய கல்வி இணை அமைச்சர் திரு.சஞ்சய் தோத்ரே, ஐஐடி ஹைதராபாத் ஆட்சிமன்றக் குழுவின் தலைவர் டாக்டர். பி. வி. ஆர். மோகன் ரெட்டி, ஐஐடி ஹைதராபாத் இயக்குநர் பேராசிரியர் பி. எஸ். மூர்த்தி மற்றும் கல்வி அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் ஐஐடி ஹைதராபாத் ஆகியவற்றின் மூத்த அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
தானியங்கிப் போக்குவரத்து மற்றும் தரவுக் கொள்முதல் அமைப்புகளுக்கான தொழில்நுட்பப் புதுமை மையத்தை அமைப்பதற்காக பல்நோக்கு சைபர் இயற்பியல் அமைப்புகளுக்கான தேசிய இயக்கத்தின் கீழ் ஐஐடி ஹைதராபாதுக்கு ரூ.135 கோடியை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வழங்கியுள்ளது.
தானியங்கிப் போக்குவரத்து அமைப்புகளுக்கான (தரை மற்றும் வான்வழி) தொழில்நுட்ப மையமான 'திஹான் பவுண்டேஷனை' பிரிவு-8 நிறுவனமாக 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐஐடி ஹைதராபாத் தொடங்கியது.
இன்றைய நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர், தானியங்கிப் போக்குவரத்தில் உள்ள பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்கு இந்த மையம் உதவும் என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684372
------
(Release ID: 1684437)
Visitor Counter : 129