பாதுகாப்பு அமைச்சகம்
வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களில் புதுமை நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் இந்திய ராணுவத்தின் வலைதள கருத்தரங்கு
Posted On:
29 DEC 2020 1:14PM by PIB Chennai
தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும், புதுமையான சூழலியலை ஊக்குவிக்கவும் இந்திய ராணுவமானது, இந்தியப் பாதுகாப்பு தளவாடத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து புதுமை நிறுவனங்களிடையே (ஸ்டார்ட் அப்) விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வலைத்தள கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
சுமார் 89 நிறுவனங்கள் தங்களது புதுமையான கண்டுபிடிப்புகள், திட்டங்கள், திட்ட முன்மொழிவுகள் ஆகியவை குறித்து கடந்த 17 முதல் 28-ஆம் தேதி வரை இந்திய ராணுவத்திடம் காணொலி வாயிலாக எடுத்துரைத்தன. பெரும்பாலான திட்டமுன்மொழிவுகள் ட்ரோன், ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், பிளாக்செயின் தொழில்நுட்பம், முப்பரிமான அச்சிடுதல், நானோ தொழில்நுட்பம், தானியங்கி அமைப்புகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் ஆகியவை குறித்து அமைந்திருந்தன. இந்த காணொலி கருத்தரங்குகளை ஏற்பாடு செய்திருந்த ராணுவ வடிவமைப்பு அலுவலகம் 13 முன்மொழிவுகளை அடுத்தக்கட்ட ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய இந்திய ராணுவத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் எஸ் எஸ் ஹஸப்னிஸ், பாதுகாப்புத் துறையில் தற்சார்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்ததோடு, பாதுகாப்புத் தொழில்துறையினரை, குறிப்பாக புது நிறுவனங்களை வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். தொழில்நுட்ப ரீதியாக புது நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய ராணுவம் வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684327
*****************
(Release ID: 1684349)
Visitor Counter : 234