ரெயில்வே அமைச்சகம்

பிரத்யேக சரக்குத் தடங்களில் இறுதிப் புள்ளி வரை சென்றடைவதை உறுதி செய்யவேண்டும்: திரு பியூஷ் கோயல்

Posted On: 28 DEC 2020 7:52PM by PIB Chennai

பிரத்யேக சரக்குத் தடங்களில் இறுதிப் புள்ளி வரை சென்றடைவதை உறுதி செய்து, பிரத்யேக சரக்குத் தடங்களின் வளர்ச்சியில் உள்ள தடையைப் போக்குவதற்கான நடவடிக்கையை ரயில்வே எடுக்க வேண்டும் என்று ரயில்வே, மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்கள், மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் திரு.பியூஷ் கோயல் கூறினார்.

இனி வரவுள்ள பிரத்யேக சரக்குத் தடங்களின் மேம்பாடு குறித்து ஆய்வு செய்த அவர், நிலம் கையகப்படுத்துதலில் மிச்சமிருக்கும் பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்காக அனைத்துப் பங்குதாரர்களிடமும் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

351 கிலோமீட்டர் நீளமுள்ள பிரத்யேக கிழக்கு சரக்குத் தடத்தின்புதிய பந்திப்பூர்-புதிய குர்ஜா பிரிவைபிரதமர் திரு.நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.

பிரயாக்ராஜில் உள்ள பிரத்யேக கிழக்கு சரக்குத் தடத்தின் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தையும் பிரதமர் திறந்து வைப்பார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684192

---



(Release ID: 1684248) Visitor Counter : 165