குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் ஞெகிழி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாபெரும் ஊடகப் பிரச்சாரம் தேவை: குடியரசுத் துணைத் தலைவர்

Posted On: 28 DEC 2020 3:03PM by PIB Chennai

ஞெகிழிப் பொருட்களை மக்கள் எவ்வாறு அப்புறப்படுத்துகிறார்கள் என்பதில் மாற்றங்களைக் கொண்டுவர மிகப்பெரிய ஊடக பிரச்சாரம் தேவை என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார்.

விஜயவாடாவில் உள்ள மத்திய பெட்ரோரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இடையே உரையாற்றிய அவர், ஞெகிழியிடம் பிரச்சினை இல்லை என்றும் அதை நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் பிரச்சினை உள்ளது என்றும் கூறினார்.

ஞெகிழியின் பயன்பாடு மற்றும் அதன் நீண்ட ஆயுளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள சவால் குறித்து குடியரசுத் துணைத்தலைவர் எடுத்துரைத்தார். நமது வாழ்க்கைத் தரத்தை பாலிமர்கள் பெரிய அளவில் மேம்படுத்தி உள்ளதாக அவர் கூறினார்.

மருத்துவ உபகரணங்கள் மற்றும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தனிநபர் பாதுகாப்பு உடைகள் ஆகியவற்றின் தயாரிப்பில் ஞெகிழி ஆற்றி வரும் பங்கை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார்.

விஜயவாடாவில் உள்ள மத்திய பெட்ரோ ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை பார்வையிட்ட அவர், தேசத்தை கட்டமைப்பதில் இந்நிறுவனம் ஆற்றிவரும் பங்களிப்பை பாராட்டினார்.

சுற்றுச்சூழலையும் பாதுகாத்து வளர்ச்சியையும் மேம்படுத்தும் வகையில் இயற்கையாக அழுகக்கூடிய ஞெகிழிப் பொருட்களை உருவாக்குமாறு மத்திய பெட்ரோரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை திரு வெங்கய்யா நாயுடு கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684097

                                                                  ******(Release ID: 1684141) Visitor Counter : 15