சுற்றுலா அமைச்சகம்

சுற்றுலாத் துறை அமைச்சகம் நடத்திய ‘‘இந்திய உணவு வகைகளின் இரகசியங்களும் மகிழ்ச்சிகளும் ” பற்றிய இணையக் கருத்தரங்கு

Posted On: 27 DEC 2020 6:30PM by PIB Chennai

     ‘உன் தேசத்தைப் பார்என்ற தலைப்பில் இணையக் கருத்தரங்குத் தொடரை சுற்றுலாத்துறை அமைச்சகம் நடத்தி வருகிறது.  இந்திய உணவு வகைகளின் இரகசியங்களும் மகிழ்ச்சிகளும்என்ற தலைப்பிலான இணையக் கருத்தரங்கம் டிசம்பர் 26ஆம் தேதி நடந்தது.  இதில் இந்திய உணவு வகைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் உணவு என்பது எண்ணற்ற உணவுகள் மற்றும் சமையல் முறைகளைக் கொண்டது.  மேலும் இது உள்நாட்டில் கிடைக்கும் மசாலா, தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களின் பயன்பாட்டால் இது வகைப்படுத்தப்படுகிறது.  ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உணவு தானியங்கள், காய்கறிகள் மசாலா போன்றவற்றின் கலவையுடன் உப்பு, இனிப்புஅல்லது காரமான சுவைகளைக் கொண்ட இந்திய உணவு ஒரு சமநிலை உணவாகும்.

இந்த இணையக் கருத்தரங்கை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டர். அருணா சர்மா வழங்கினார். உள்நாட்டில் வளர்க்கப்படும் உணவு தானியங்கள், காய்கறிகள், மசாலாப் பொருள்களின் பங்குமுக்கியத்துவம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில்  அதன்  பங்கு குறித்து அவர் வலியுறுத்தினார்.

இந்திய உணவு, உள்நாட்டில் கிடைக்கும் உணவு தானியங்கள், காய்கறிகள், மசாலாப் பொருள்கள் போன்றவற்றுடன் முழுமையான அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. வீட்டில் சமைத்த உணவு, தெரு உணவு முதல் சிறந்த உணவு அனுபவம் வரை வெவ்வேறு வகைகளில்  கிடைக்கிறது.

உனது தேசத்தை பார்’  இணையக் கருத்தரங்குத் தொடர்  நாட்டின் அழகான மாறுபட்டக் கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுகிறது. இது ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை தழுவியது. 

நாடு முழுவதும் கிடைக்கும் பல்வேறு வகையான உணவு வகைகள், உணவு முறைகள்  குறித்து கூடுதல் இயக்குநர் ஜெனரல் ரூபீந்தர் பிரார், இந்தக் கருத்தரங்கில் சுருக்கமாக விளக்கினார்.

தேசிய இ-நிர்வாகத்துறையுடன் இணைந்து உனது தேசத்தைப் பார்இணையக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இந்த இணையக் கருத்தரங்கை கீழ்கண்ட இணைப்பிலும் https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured,

இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் சமூக ஊடகத்திலும் காணலாம்.

அடுத்த இணையக் கருத்தரங்கு கொல்கத்தாவில் குளிர்காலம்என்ற தலைப்பில் 10 அறியப்படாத இடங்கள் பற்றி 2021 ஜனவரி 2ஆம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684006

**********************



(Release ID: 1684019) Visitor Counter : 233