சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கோவிட்டை எதிர்கொள்வதற்கான ஆலோசனையை தேசியப் பணிக்குழு செய்தது

Posted On: 26 DEC 2020 5:59PM by PIB Chennai

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கோவிட்-19 பரிசோதனை, சிகிச்சை மற்றும் கண்காணிப்பு யுக்திகள் குறித்து தேசியப் பணிக்குழு ஆலோசித்தது.

நிதிஆயோக் உறுப்பினர் பேராசிரியர் வினோத் பால், சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளர் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைமை இயக்குநர் பேராசிரியர் பல்ராம் பார்கவ் ஆகியோரின் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதை எவ்வாறு தடுப்பது, பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்துள்ள பயணிகளைக் கண்காணித்தல், தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபர்களை 14 நாட்களுக்கு பிறகு, அதுவும் இரண்டு முறை தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்த பிறகு, மருத்துவமனையிலிருந்து விடுவித்தல் ஆகிய நடவடிக்கைகள் குறித்து நிபுணர்கள் விவாதித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683835

                                                             -----



(Release ID: 1683904) Visitor Counter : 221