நிதி அமைச்சகம்

வணிகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்களை நிறைவு செய்த ஆறாவது மாநிலமாக ராஜஸ்தான் ஆனது

Posted On: 26 DEC 2020 11:00AM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறையால் பரிந்துரைக்கப்பட்ட வணிகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்களை நிறைவு செய்த ஆறாவது மாநிலமாக ராஜஸ்தான் ஆனது.

இதன் காரணமாக, திறந்தவெளிச் சந்தைகளில் இருந்து கூடுதலாக ரூ. 2,731 கோடி கடனாகப் பெறுவதற்கு அம்மாநிலம் தகுதி பெற்றது. இதற்கான அனுமதியை 2020 டிசம்பர் 24 அன்று செலவினங்கள் துறை வழங்கியது.

ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்கள் வணிகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்களை ஏற்கனவே நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட மாநிலங்கள் இந்தச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி உள்ள காரணத்தால், ரூ.19,459 கோடி ரூபாய் கூடுதல் கடனாகப் பெறுவதற்கு இவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் நாட்டில் நிலவுவதற்கான முக்கியமான குறியீடு வணிகம் செய்வதை எளிதாக்குதல் ஆகும். இந்தச் சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் மாநிலங்களின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683752

                                                                      -----



(Release ID: 1683817) Visitor Counter : 152